இடுகைகள்

படம்
            பஞ்ச ஜோதி லிங்கம் பார்த்தால் பாவம் நீங்கும்                முதலும் முடிவும் அற்ற முழுமுதற் கடவுளாம், முக்தியளிக்கும் ஈசன் அழகான ஒளிப்பிழம்புகளாகத் தோன்றிய தலங்களே ஜோதிர்லிங்க ஸ்தலங்களாக அறியப்படுகின்றன.பக்தர்களுக்கு அருளும்பொருட்டு பரமன் இவ்வாறு எழுந்தருளிய பனிரெண்டு தலங்களைக் கீழ்க்கண்ட பாடல் வழியாக அறிந்து கொள்ளலாம் சௌராஷ்ட்ரத்தில் சோமனாதர் ,  ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுனர் ,  உஜ்ஜயினியில் மஹாகாலர் ,  ஓம்காரத்தில் மாமலேஷ்வர் , பராலயத்தில் வைத்யனாதர் ,  தாக்கினியில் பீமாசங்கர் , சேது பந்தத்தில் ராமேஷ்வரர் ,  தாருகாவனத்தில் நாகேஷ்வரர் ,  வாராணசியில் விஸ்வநாதர் ,  கௌதமீதத்தில் த்ரம்யபகேஷ்வரர் ,  ஹிமாலயத்தில் கேதாரநாதர் ,  வேருலத்தில் க்ரிஷ்னேஷ்வரர் . எளிதாக புரிந்து கொள்ள வேண்டுமானால் குஜராத்தில்  சோமநாதர் ஆந்திரத்தின் ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுனர் மத்யப்ரதேசத்தில் இரண்டு, அதாவது உஜ்ஜயினியில் மஹாகாலர் ஓங்காரேஸ்வரத்தில் ஓங்காரேஸ்வரர் உத்தரப்ரதேசத்தின் வாராண...
படம்
                                                                         பத்ரி கேதார் யாத்திரை சைவமும் வைணவமும் ஒன்றுதான்  .  இறைவனை அடையும் வெவ்வேறு மார்க்கங்கள் தான் இவை என்பதை தெள்ளத் தெளிவாக புலப்படுத்தும் தலங்கள் தான் ஸ்ரீ பத்ரிநாத் ஸ்ரீ கேதார்நாத். இயற்கை எழில் கொஞ்சும் இமயமலையின் பனி படர்ந்த சிகரங்களுக்கு இடையே    அமைந்துள்ளன இந்த இரு புண்ணிய தலங்கள் . பத்ரி நாத் கோயில் பற்றி வழங்கப்படும் வரலாறு சுவையானது.ஆதி காலத்தில் சிவ பெருமானும்    உமையம்மையும் இந்த மலைப் பகுதியில் தான் வசித்து வந்தார்களாம். ஒரு முறை ஐயனும் அம்மையும் வெந்நீர் ஊற்றில் குளித்து விட்டு வந்தபோது ஒரு சிறு    குழந்தை    வாயிலில் அழுது கொண்டிருந்ததைக் கண்டார்களாம் . சேய் அழுவதைக் காண எந்தத் தாயும் பொறுப்பாளா ?  ஜகன் மாதாவாயிற்றே!அள்ளி அணைக்கத் துடித்தாள் .தடுத்தார் சிவ பெருமான். ...
படம்
                             துவாரகை சோம்நாத் யாத்திரை                    சைவமும் வைணவமும் சேர்ந்தே தழைத்து வந்த நாடு நம் நாடு. வடக்கே பத்ரி கேதார்,கிழக்கே பூரி புவனேஷ்வர்,மேற்கே துவாரகை சோம்நாத், தெற்கே வைணவக் கடவுளான ஸ்ரீராமபிரானே ஈஸ்வரனை பூஜித்த தலமான ராமேஸ்வரம் என நாட்டின் நான்கு மூலைகளுமே இதைப் பறை சாற்றுகின்றன. இந்தப் பதிவில் அரபிக்கடலின் அலைகள் அடிவருடிச் செல்லும் அருட்தலங்களான துவாரகை சோம்நாத் பற்றி சில தகவல்களைப் பார்க்கலாம்.                துவாரகை 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நகரம்   எனக்கூறப்படுகிறது.கண்ணபிரான்,கொடுங்கோலனான தனது மாமன்   கம்சனை வதம் செய்ததால் கோபமுற்ற கம்சனின்மாமனார்ஜராசந்தன்,   மதுரா நகரின் மீது மீண்டும் மீண்டும் படையெடுத்து வரவே,கிருஷ்ண   பகவான் போர்க்களத்தை விட்டோடி துவாரகை நகரத்தை சென்று   அடைந்ததாக ஒரு புராணக் கதை உண்டு.அதனால்தான் கண்ண...