
பஞ்ச ஜோதி லிங்கம் பார்த்தால் பாவம் நீங்கும் முதலும் முடிவும் அற்ற முழுமுதற் கடவுளாம், முக்தியளிக்கும் ஈசன் அழகான ஒளிப்பிழம்புகளாகத் தோன்றிய தலங்களே ஜோதிர்லிங்க ஸ்தலங்களாக அறியப்படுகின்றன.பக்தர்களுக்கு அருளும்பொருட்டு பரமன் இவ்வாறு எழுந்தருளிய பனிரெண்டு தலங்களைக் கீழ்க்கண்ட பாடல் வழியாக அறிந்து கொள்ளலாம் சௌராஷ்ட்ரத்தில் சோமனாதர் , ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுனர் , உஜ்ஜயினியில் மஹாகாலர் , ஓம்காரத்தில் மாமலேஷ்வர் , பராலயத்தில் வைத்யனாதர் , தாக்கினியில் பீமாசங்கர் , சேது பந்தத்தில் ராமேஷ்வரர் , தாருகாவனத்தில் நாகேஷ்வரர் , வாராணசியில் விஸ்வநாதர் , கௌதமீதத்தில் த்ரம்யபகேஷ்வரர் , ஹிமாலயத்தில் கேதாரநாதர் , வேருலத்தில் க்ரிஷ்னேஷ்வரர் . எளிதாக புரிந்து கொள்ள வேண்டுமானால் குஜராத்தில் சோமநாதர் ஆந்திரத்தின் ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுனர் மத்யப்ரதேசத்தில் இரண்டு, அதாவது உஜ்ஜயினியில் மஹாகாலர் ஓங்காரேஸ்வரத்தில் ஓங்காரேஸ்வரர் உத்தரப்ரதேசத்தின் வாராண...