
பத்ரி கேதார் யாத்திரை சைவமும் வைணவமும் ஒன்றுதான் . இறைவனை அடையும் வெவ்வேறு மார்க்கங்கள் தான் இவை என்பதை தெள்ளத் தெளிவாக புலப்படுத்தும் தலங்கள் தான் ஸ்ரீ பத்ரிநாத் ஸ்ரீ கேதார்நாத். இயற்கை எழில் கொஞ்சும் இமயமலையின் பனி படர்ந்த சிகரங்களுக்கு இடையே அமைந்துள்ளன இந்த இரு புண்ணிய தலங்கள் . பத்ரி நாத் கோயில் பற்றி வழங்கப்படும் வரலாறு சுவையானது.ஆதி காலத்தில் சிவ பெருமானும் உமையம்மையும் இந்த மலைப் பகுதியில் தான் வசித்து வந்தார்களாம். ஒரு முறை ஐயனும் அம்மையும் வெந்நீர் ஊற்றில் குளித்து விட்டு வந்தபோது ஒரு சிறு குழந்தை வாயிலில் அழுது கொண்டிருந்ததைக் கண்டார்களாம் . சேய் அழுவதைக் காண எந்தத் தாயும் பொறுப்பாளா ? ஜகன் மாதாவாயிற்றே!அள்ளி அணைக்கத் துடித்தாள் .தடுத்தார் சிவ பெருமான். ...